புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

24.8.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை - கருணாநிதி, ஆதித்தனார் மனுக்கள் மீது வாதங்கள்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

24.8.1976 - Dinamani

Published On :

புதுடில்லி, ஆக: 23 - சர்க்காரியா கமிஷனிடம், மகஜர்தாரர்காளன அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும், வலது கம்யூனிஸ்டு தலைவர் எம். கல்யாணசுந்தரமும் தாக்கல் செய்துள்ள பிராமாண வாக்குமூலங்களில் சில பகுதிகளை நிராகரிக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் எனக் கோரி, முன்னாள் முதன் மந்திரி கருணாநிதி, மற்றும் 5 மாஜி மந்திரிகள் கொடுத்துள்ள மனு பேரிலும், முன்னாள் கூட்டுறவு மந்திரி ஆதித்தனார் கொடுத்துள்ள மனு பேரிலும் இன்று கமிஷன் முன்பு வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

முன்னாள் முதன் மந்திரி கருணாநிதி மீதும், மற்றும் சில முன்னாள் மந்திரிகள் மீதும் கூறப்பட்டுள்ள ஊழல், துஷ்பிரயோக புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர். எஸ். சர்க்காரியா ஒரு நபர் கமிஷனாக நியமிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

சம்மந்தமற்றதாகவோ அல்லது கமிஷனின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாகவோ உள்ள புதிய குற்றச்சாட்டுகள் இந்தப் பிரமாண வாக்குமூலங்களில் உள்ளதாக இரு வக்கீல்களும் கூறினார்கள்.

ஆதித்தனார் மனு மீது வாதம் இன்று காலையில் முடிவடைந்தது. சாந்திபூஷண் மனு மீது வாதம் புரிந்தார். அவர் வாதம் இன்று பின்னர் கருணாநிதியின் முடியவில்லை. நாளை வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ...

த.நா. வறட்சி நிவாரணம்: உள்துறை மந்திரி உறுதி

புது டில்லி, ஆக. 23 - தமிழ்நாட்டில் செப். 10லிருந்து மேலும் 6 மாத காலத்துக்கு ராஷ்டிரபதி ஆட்சியை நீடிக்க லோக் சபை இன்று அங்கீகாரமளித்தது. இது பற்றிய தீர்மானம் ஏற்கனவே ராஜ்ய சபையில் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அம்மாநில மக்களிடையே பொதுவான எண்ணம் நிலவுவதாக உள்துறை மந்திரி பிரம்மானந்த ரெட்டி கூறினார். ராஷ்டிரபதி ஆட்சியை நீடிப்பதற்கான தீர்மானம் மீது நடந்த விவாதத்துக்கு அவர் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி அமலாக்கப்பட்ட பின்னரே 20 அம்ச திட்ட அமல் முழு மூச்சுடன் துவங்கியதாக அவர் கூறினார். தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை யொட்டி தமிழக மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டதாக பிரம்மானந்த ரெட்டி குறிப்பிட்டார்.

இடது கம்யூனிஸ்ட் மெம்பர் தவிர சபையில் இதர தரப்பினர் அனைவரும் தீர்மானத்தை வரவேற்றனர். ...

Summary

24.8.1976: Sarkaria Commission Inquiry – Arguments on the petitions filed by Karunanidhi and Adithanar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.