10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

26.1.1976: காமராஜுக்கு “பாரத ரத்னா” விருது - மதுரை சோமுவுக்கு “பத்ம ஸ்ரீ”

காமராஜுக்கு “பாரத ரத்னா” விருது அறிவிக்கப்பட்டது பற்றி...

26.1.1976

Published On :

புதுடில்லி, ஜன. 25 - நாட்டின் தலைசிறந்த தேசிய விருதான “பாரத் ரத்னா” காலஞ்சென்ற தலைவர் காமராஜுக்கு வழங்கப்படுகிறது. 27-வது குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

திரைப்படத் தயாரிப்பாளர் திரு. சத்யஜித்ரேக்கு “பத்ம விபூஷன்” விருது அளிக்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த தெலுங்கு கவிஞரும், பாடலாசிரியருமான திரு. டி.வி.கே. சாஸ்திரி, சென்னை சேவா சுகாதார சர்விஸ்கள் வைத்திய நிலைய, பேராசிரியர் டாக்டர் கே.எஸ். சஞ்சீவி, சென்னை அபிவிருத்தி கழக டைரக்டர் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா, பம்பாய் சமூக சேவகி பேகம் ஸோரா அலியவர் ஜங் மற்றும் பலருக்கு “பத்ம பூஷன்” விருதுகள் அளிக்கப்படுகின்றன.

புதுடில்லி, தற்காப்பு இலாகா, மத்திய ரேடியோ தொடர்பு ஸ்தாபனம், டைரக்டர் பிரிகேடியர் அஜித் சிங், பம்பாய் பாடகர் பேராசிரியர் பாலகிருஷ்ணரகுநாத தியோதார், சென்னை ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் மானேஜிங் டைரக்டரும், தலைவருமான திரு. கோவிந்த பிள்ளை உன்னிகிருஷ்ண மேனன், கேரளா வைத்தியக் கல்லூரி மருந்துப் பிரிவு கெளரவ பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணபாய் நாராயணபாய், சென்னை, மதுரை எஸ். சோமசுந்தரம் (மதுரை சோமு), சென்னை, வைத்தியக் கல்வி டைரக்டர் டாக்டர் மாணிக்கம் நாராயணன் மற்றும் பலருக்கு “பத்ம ஸ்ரீ” விருதுகளும் அளிக்கப்படுகின்றன.

புதுவை ராஜ்யத்தில் மதுவிலக்கு பூர்வாங்க நடவடிக்கை - சம்பள பட்டுவாடா நாளன்று மதுக்கடைகள் மூடப்படும்

புதுச்சேரி, ஜன. 25 - புதுச்சேரி ராஜ்யத்தில் மதுவிலக்கு அமலுக்கு பூர்வாங்க நடவடிக்கையாக சம்பள பட்டுவாடா நாளன்று புதுவை ராஜ்ய முழுதும் மதுபானக் கடைகளை மூடிவிட லெப்டினன்ட் கவர்னர் திரு. செடிலால் உத்தரவிட்டுள்ளார். இதனை இன்றிரவு ரேடியோவில் அவர் மக்களுக்குத் தெரிவித்த குடியரசு தினச் செய்தியில் வெளியிட்டார்.

மேலும் அவர் நிகழ்த்திய உரையின் சாராம்சமாவது:

“யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் திட்ட வேலைகள் நடந்த விதத்தை திட்டக் கமிஷன் பாராட்டி, கடந்த ஆண்டு திட்ட முதலீடான ரூ. 5.25 கோடியை 1976 - 77ம் ஆண்டு திட்ட முதலீட்டை ரூ. 6.97 கோடி ஆக்கியுள்ளது.

அவசர நிலைமை பிரகடனமான பின், கடந்த 7 மாத காலத்தில் புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி முன்னேறியுள்ளது. அபிவிருத்தி முன்னேறியுள்ளது. முக்கியமாக சிறு விவசாயிகளும், ஏழை எளியவர்களுமான கிராம மக்களுக்கு அதிகரித்த நன்மை செய்யப்பட்டுள்ளது. ...

Summary

26.1.1976: Kamaraj receives the “Bharat Ratna” award - Madurai Somu receives the “Padma Shri” award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.