17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

6.6.1976: வெளிநாட்டிலுள்ள இந்தியர் முதலீட்டுக்குச் சலுகை - மத்திய அரசின் புது திட்டம்

வெளிநாட்டிலுள்ள இந்தியர் முதலீட்டுக்குச் சலுகை - மத்திய அரசின் புது திட்டம்...

News image

6.6.1976 - Dinamani

Updated On :6 ஜூன் 2026, 4:01 am IST

புது டில்லி, ஜூன். 5 - இந்தியாவில் முன்னுரிமை ஏற்றுமதித் துறையில் தொழில்கள் நிறுவ, வெளிநாடுகளிலுள்ள இந்தியவாசிகளின் முதலீட்டை, பண வரத்தைக் கவர மத்திய அரசு இன்று புதிய தளர்த்தப்பட்ட திட்டம் ஒன்றை அறிவித்தது.

தொழில், சிவில் சப்ளை இலாகா ராஜாங்க மந்திரி ஏ. சி. ஜார்ஜ் இன்று நிருபர்களிடம் இத் தகவலைத் தெரிவித்தார்.

75% ஏற்றுமதிக்கு உறுதி தரவேண்டும்

இந்தப் புதிய திட்டப்படி இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் 1973ம் ஆண்டு தொழில் லைசென்ஸ் கொள்கையின் கீழ் உள்ள தொழில்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இவர்கள் உற்பத்தியில் குறைந்தது 60 சதமாவது ஏற்றுமதி செய்வதாக உறுதி அளித்தால், மற்ற தொழில்களிலும் பங்கு கொள்ளலாம். சிறு தொழில் துறையில் இவர்கள் மொத்த உற்பத்தியில் 75 சதத்தை ஏற்றுமதி செய்வதாக உறுதியளிக்க வேண்டும்.

யந்திரங்களை இறக்குமதி செய்யலாம்

இவர்கள் கொண்டு வரும் அந்நிய செலாவணி அளவுக்கு, மூலதன யந்திர சாதனங்களை இறக்குமதி செய்யவும் அனுமதிக்கப்படும். அப்போதைக்கப்போது உள்ள இறக்குமதிக் கொள்கைகளின்படி இவர்கள் கச்சாப் பொருட்களும் இறக்குமதி செய்யலாம். தொழிற்சாலைகளில் கிடைக்கும் லாபம் முழுவதையும் எடுத்துச் செல்லலாம். ...

"இந்திய - ரஷிய நல்லுறவை பலப்படுத்தும்” - தம்முடைய மாஸ்கோ பயணம்பற்றி பிரதமர் இந்திரா காந்தி நம்பிக்கை

புது டில்லி, ஜூன். 5- தமது ரஷிய பயணம் இவ்விரு நாடுகளிடையேயுள்ள நட்புறவு, நல்லுணர்வை மேலும் பலப்படுத்தும் என்று பிரதமர் இந்திரா காந்தி இன்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரஷிய டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு அவர் பேட்டியளித்தார்.

ரஷிய, இந்தியத் தலைவர்கள் பரஸ்பரம் வருகைகள் தந்திருப்பது நம்மிடையேயுள்ள நல்லுறவைக் குறிக்கிறது என்றும், தனது ரஷிய பயணம் இதனை மேலும் பலப்படுத்தும் என்றும் கூறினார். ...

... இந்திரா காந்தியின் திட்டங்கள்

தற்காலிகத் திட்டப்படி, பிரதமர் இந்திரா காந்தி இவ்விரு நாடுகளின் அரசியல், பொருளாதார விஷயங்கள் பற்றியும், முக்கியமான சர்வதேசப் பிரச்னைகள் பற்றியும் ரஷிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரெஸ்னேவ், ரஷிய தலைவர் கோஸிஜின், மற்ற தலைவர்களுடன் 3 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

பிரதமர் இந்திரா காந்தியின் காரியதரிசி பி.என். தார், வெளி விவகார இலாகா காரியதரிசிகள் எம். ஏ. வெள்ளோடி, அஹுஜா ஆகியோர் கடந்த 3 நாட்களாக மாஸ்கோவில் இந்தப் பேச்சு வார்த்தைக்காக விஷயங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா - ரஷியா நட்புறவுக் கொள்கைகளின் அடிப்படையிலானது. காலத்தினால் பலப்பட்டது. இந்தியா - ரஷியா ஒப்பந்தம் இவ்விரு நாடுகளின் நட்புறவு, ஒத்துழைப்பின் சின்னமாக விளங்குகிறது. ...

Summary

Concessions for investments by Indians abroad – New Central Government scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.