ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சட்டவிரோத செயல்களைத் தடுக்க டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

டெலிகிராம் மூலம் நிகழும் சட்டவிரோத செயல்களைத் தடுக்க அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது பற்றி...

Telegram

டெலிகிராம். - பிரதிப்படம்

Published On :4 ஜூலை 2026, 2:35 pm IST

டெலிகிராம் மூலம் நிகழும் சட்டவிரோத செயல்களைத் தடுக்க அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு சனிக்கிழமை (ஜூலை 4) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெலிகிராம் செயலியின் வழியாக திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் போன்றவை திருட்டுத்தனமான முறையில் வெளியிடப்படுவதாகவும் காப்புரிமை பெற்ற விடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பாதுகாப்பற்ற முறையில் பரப்பப்படுவதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆகையால், இந்த சட்டவிரோத செயல்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதுகுறித்த அறிக்கையை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டெலிகிராம் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள்கள் டெலிகிராம் வழியாக கசிந்தது உறுதி செய்யப்பட்டதால் நீட் மறுதேர்வு நாள் வரை அந்த செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் வினாத்தாள் கசிவு, ஆன்லைன் திருட்டு, பாலியல் ரீதியான குற்றங்கள், பங்குச்சந்தை அழைப்புகள் போன்ற குற்றங்கள் டெலிகிராம் வழியாக நடைபெறுவதாகவும் இதற்கான பாதுகாப்பு அம்சங்களை செயலியில் மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தது.

Summary

The Central Government sent a notice to Telegram on Saturday (July 4) to curb illegal activities taking place on the platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.