புது டில்லி, மே. 9- நிலச் சொந்தக்காரர்கள் பினாமியாக யார் பெயரில் நிலங்களை எழுதி வைத்திருக்கிறார்களோ அந்த பினாமிகளுக்கே நிலம் சொந்தம் என்று உரிமை அளிக்க அரசாங்கம் சட்டம் கொண்டு வரக் கூடும்.
இது சம்பந்தமான மசோதா பார்லிமெண்டின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில உச்சவரம்பு சட்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, நிலச் சொந்தக்காரர்கள், எந்த நபர்களின் பெயரில் பொய்யாக நிலங்களை மாற்றினார்களோ அந்த நபர்களுக்கே அந்த நிலங்களைச் சொந்தமாக்க வேண்டும் என்று சட்டக் கமிஷன் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
இக்கமிஷனின் சிபாரிசுகள் இன்னமும் பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையே மாநிலங்களின் கருத்தறிய அவை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில் நடந்த மாநில முதல்வர்கள் மகாநாட்டில் பினாமி நிலங்கள் பற்றியும், அரசியல் சட்டத்திலான கட்டமைப்பு மாறுதல்கள் பற்றிய யோசனைகளும் ஆராயப்பட்டன.
இந்தியா பூராவிலும் பினாமி நிலப் பிரச்னை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாக விவசாய அமைச்சகம் கருதுகிறது. எனினும் அது எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிய சர்வே எதுவும் நடத்தப்படவில்லை. பினாமி பெயர்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள நிலங்கள் பினாமி நபர்களுக்கே சொந்தம் என்று ஆக்குவதானது பெரிய நில உடைமைகளை உடைப்பதோடு, கிராமப்புற செல்வந்தர்களின் செல்வாக்கையும் பலவீனப்படுத்தும். ...
கொடைக்கானல் பஸ் விபத்தில் சாவு 16 ஆக உயர்வு
மதுரை, மே 9- கொடைக்கானலில் டம்டம் பாறை அருகே ஏற்பட்ட பஸ் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
டம்டம் பாறையானது கொடைக்கானல் அடிமலையிலிருந்து 16 கிலோ மீட்டர் (10 மைல்) தூரத்தில் இருக்கிறது.
இந்த இடத்தில் 150 மீட்டர் (163 கெஜம்) ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து விட்டது.
கேரளத்தில் கோட்டயம் ஜில்லாவில் குரவிலங்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு "ஞாயிறுப் பள்ளி"யைச் சேர்ந்த மதபோதகர்களின் கோஷ்டியை ஏற்றிவந்த பஸ் இது. சுற்றுலாவாக வந்து பல இடங்களைப் பார்த்துவிட்டு கோடைக்கானலிலிருந்து இந்தக் கோஷ்டி மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்து. பஸ்ஸில் மொத்தம் 50 பேர் இருந்தார்கள். ...
Summary
Benami Land — Central Law Forthcoming: Plan to Vest Ownership in the Name of the Registered Holder
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக அரசு பொறுப்பேற்ற 20 நாள்களில் சட்டம்-ஒழுங்கில் என்ன பிரச்னை வந்தது? செங்கோட்டையன்
பிரசாரத்தில் பஞ்ச் டயலாக் பேசிய விஜய் இப்போது 'ஸ்லீப் மோடு'க்குச் சென்றுவிட்டார்! உதயநிதி

சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

துரித நடவடிக்கைகள் மூலம் சட்டம் - ஒழுங்கு காக்கப்படுகிறது: அமைச்சர் ராஜ்மோகன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




