புதுடில்லி. மே. 11 - 12 பேர் கொண்ட தூது கோஷ்டி தலைமையில் அயல்நாட்டு இலாகா செயலாளர் ஐகத் மேத்தா இன்று இஸ்லாமாபாத்துக்குப் பயணமானார். இந்தியா பாகிஸ்தானிடையே நடக்கும் பேச்சு இரு நாடுகள் இடையே சகஜ உறவு ஏற்பட வழிகோலும் என்று அவர் மனப்பூர்வமான நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு விசேஷ இந்திய விமானப் படை விமானத்தில் புறப்படுவதற்கு முன்பு டில்லி விமான நிலையத்தில் நிருபர்கள் இடையே அவர் பேசினார். இரு பிரதமர்கள் இடையே பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட்ட கடிதங்கள் அடிப்படையில் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் எஞ்சியுள்ள எல்லா பிரச்னைகள் பற்றியும் விவாதித்துத் தீர்க்க தங்கள் தூது கோஷ்டி செல்வதாக அவர் சொன்னார்.
சிவில் விமான போக்குவரத்து, மீண்டும் ராஜதந்திர உறவை ஏற்படுத்துதல் ஆகியவை பற்றிய விவாதம் பயனுள்ளதாக இருந்து விரைவில் சகஜ உறவு காண முடியும் என நம்புவதாக அவர் சொன்னார்.
ஒத்துழைப்பு, நேசமான அரசியல், பொருளாதார உறவு ஆகியவற்றில் தாங்கள் எப்பொதும் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் சொன்னார்.
புதிய சுற்றுப் பேச்சு விரைவில் சகஜ உறவுக்கு வழி கோலும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ரயில், ரஸ்தா இணைப்பு மீண்டும் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியத் தூது கோஷ்டி ராவல்பிண்டிக்கு வந்து சேர்ந்தது. இரு தரப்பிலும் உறுதி இருந்தால் சகஜ உறவு காண்பது சிரமமல்ல என மேத்தா கூறினார். ...
1978-லிருந்து துவங்கும் ஹையர் செகண்டரி கல்விக்கு தனி போர்டு ஏற்படும் - புதிய கல்வித் திட்டம் விளக்கம்
சென்னை, மே. 11- தமிழ் நாட்டில் ஹையர் செகண்டரிக் கல்விக்கு ஒரு தனி போர்டு விரைவில் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வி டைரக்டர் டாக்டர் லாரன்ஸ் இன்று அறிவித்தார்.
ரோட்டரி கிளப் கூட்டத்தில் அவர் பேசுகையில்; 1978லிருந்து துவங்கவிருக்கும் புதிய 10-2-3 படிப்புத் திட்டத்தில் 2 வருஷ ஹையர் செகண்டரி அல்லது பட்ட முற்படிப்புக்கு இந்தப் போர்டு பொறுப்பேற்கும் என்று கூறினார்.
பள்ளிக் கல்வியில் முதல் படிவத்திலிருந்து 10-வது படிவம் வரையில் கைத் தொழிற் பயிற்சியும் இருக்குமாதலால், இந்தக் கைத்தொழில் பயிற்சியைக் கவனித்துக் கொள்ள ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் லாரன்ஸ் அறிவித்தார். ...
Summary
Indian Delegation Visits Pakistan — Hope for the Restoration of Normal Relations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆளுநரின் கேரள பயணம் ரத்து! இபிஎஸ் சந்திப்பு?

இந்தியா-சுரிநாம் உறவு குடும்பப் பிணைப்பில் வேரூன்றியுள்ளது: அமைச்சர் ஜெய்சங்கர்

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


