தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

21.5.1976: மதுவிலக்கு அமல் - த.நா. முழுவதும் கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள்

மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்த த.நா. முழுவதும் கண்காணிப்பு குழுக்கள்...

News image

21.5.1976 - Dinamani

Updated On :21 மே 2026, 4:00 am IST

சென்னை, மே: 20 - மதுவிலக்குச் சட்டத்தை அதிக அளவு கண்டிப்பாக அமல் நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் கிராம மட்டத்தில் கண்காணிப்புக் கமிட்டிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

தஞ்சை, திருநெல்வேலி, வட ஆற்காடு ஜில்லாக்களில் ஏற்கனவே இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வட ஆற்காடில் பஞ்சாயத்து போர்டு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு இத்தகைய கமிட்டியே காரணம்.

1974 செப்டம்பரில் மதுவிலக்கு மீண்டும் அமலாக்கப்பட்ட பின்னர் 13 ஆயிரம் கள்ளச் சாராயம் காய்ச்சுவோரும், 50 ஆயிரம் பேர் கள்ளச் சாராயம் வைத்திருந்ததும், 1974 டிசம்பருடன் முடிந்த 4 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். 1975-ல் மொத்தம் 4.5 லட்சம் பேர் பிடிபட்டனர். ரூ. 1.40 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சேலம், வடஆற்காடு, கோவை, ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஜில்லாக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பேர் போனவை என்று சொல்லப்படுகிறது. சுமார் ஒரு மாதத்தில் 500 கேஸ்கள் இந்த ஜில்லாக்களில் பிடிபடுகின்றன.

இதனைத் தடுக்க போலீஸ் கோஷ்டிகள், மொபைல் கோஷ்டிகள் சோதனை நடத்துகின்றன. ...

... பதனீருக்குப் பதில் கள்ளிறக்குவது தஞ்சை, ராமநாதபுரம், வடஆற்காடு, திருநெல்வேலி ஜில்லாக்களில் நடக்கிறது.

சில ஜில்லாக்களில் உதவி பப்ளிக் பிராசிகியூட்டர்கள் இல்லாததால் கோர்ட்டுகளில் மதுவிலக்கு வழக்குகளை நடத்துவது சங்கடமாக உள்ளது. மதுவிலக்கு வழக்குகளை உதவி பப்ளிக் பிராசிகியூட்டர் நடத்துவதற்காக தனி ரெவினியூகளை நியமிக்குமாறு போர்டுக்கு ஏற்கெனவே பிரேரணை அனுப்பப்பட்டிருக்கிறது.

குளோரல் ஹைட்ரேட் அபாயகரமான மருந்து. உ.பி., பீஹார், போன்ற மாநிலங்களிலிரு ந்து வரவழைக்கப்படுகிறது. குருடு, மரணம் ஏற்படும் அபாயம் இம் மருந்தினால் உண்டு. ஆயுர்வேத மருந்துகளில் இம்மருந்தும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. போலீசார் இது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

பி. இ. படிப்பு காலம் 4 ஆண்டாக குறையும்?

புது டில்லி, மே.19- தான் அமைத்த ஒரு கமிட்டியின் சிபாரிசை அகில இந்திய தொழில் நுணுக்கக் கல்விக் கழகம் ஏற்பதாக இருந்தால், 1980-81 ஆம் ஆண்டிலிருந்து என்ஜினியரிங் பட்டப் படிப்புக் காலம் 4 ஆண்டுகளாகக் குறையும்.

கழகத்தின் கூட்டம் வெள்ளிக் கிழமையன்று இங்கு நடைபெற இருக்கிறது.

பல்கலைக்கழக மான்யக் கமிஷனுடன் சேர்ந்து தொழில் நுணுக்கக் கல்விக் கழகம் இந்தக் குழுவை ஜி.ஆர். தாமோதரன் (பி.எஸ்.ஜி. தொழில் நுணுக்கக் கல்விக் கல்லூரி டைரக்டர்) தலைமையில் அமைத்தது.

தொழில் நுணுக்க டிப்ளமாவுக்கு 10 ஆண்டு பள்ளிப் படிப்பு குறைந்தபட்சப் படிப்பாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இந்த டிப்ளமா படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும் கழகம் சிபாரிசு செய்திருக்கிறது.

Summary

May 21, 1976: Prohibition Implemented — Vigilance Committees Formed at the Village Level Across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.