இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்

News image

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 2:08 pm IST

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்ய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைப் பெறாததால், ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்த நிலையில், திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், இத்தகைய செய்திகளுக்கு திமுக, அதிமுக தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திமுகவும் அதிமுகவும் தனித்தோ ஒன்றிணைந்தோ ஆட்சியமைத்தால், தவெகவின் எம்எல்ஏ-க்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என கட்சியினருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தவெகவினருக்கு யாரேனும் ரூ. 10 கோடி கொடுத்தாலும், கட்சித் தலைவர் விஜய்க்கு நேர்மையாக நடக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

Summary

All 107 TVK MLAs To Resign If DMK, AIADMK Try To Form Government: Sources

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.