உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

29.5.1976: காஷ்மீர் குறித்த சீன கொள்கை மாறுகிறது?

காஷ்மீர் குறித்த சீன கொள்கை மாறுகிறது?

News image

29.5.197 - Dinamani

Updated On :29 மே 2026, 4:00 am IST

ஹாங்காங், மே. 28 - தெற்கு ஆசியாவில் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்குத் தகுந்த பொறுப்புகளைச் சீனா ஏற்கும் என்று சீனப் பிரதமர் ஹுவா கோஃபெங் இவ்வாரம் அறிவித்தார். பீகிங்கின் வெளிநாட்டுக் கொள்கையில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதாக கருதப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவுக்கு அளிக்கப்பட்ட ஒரு வரவேற்பில் பிரதமர் ஹுவா இதைத் தெரிவித்தார்.

அந்த உரையில் காஷ்மீரைப் பற்றி ஹுவா எதுவும் கூறவில்லை.

இதற்கு முந்திய சீனப் போக்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்கு முன்பு காஷ்மீர் தேர்தல்கள் குறித்து பாகிஸ்தான் கொண்டிருக்கும் நிலையைச் சீனா ஆதரித்து வந்தது.

ஜப்பானிலிருந்து 'அண்மைக் கிழக்கு' வரை தென் பிராந்தியத்தில் இருக்கும் எல்லா நாடுகளுடனும் சங்கிலித் தொடர் போன்று புது நல்லுறவை ஏற்படுத்த முடியும் எனச் சீனா நம்புவதாகத் தோன்றுகிறது. இப்பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவராகச் சீனாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தாற்போல் ஜூன் 2-ஆம் தேதியன்று நேபாள மன்னர் வீரேந்திரா வர இருக்கிறார். ...

ஸ்வரண்சிங் குழு யோசனைகளை காரிய கமிட்டி ஏற்றது

புது டில்லி, மே. 28 - அரசியல் சட்ட மாறுதகள் பற்றி ஸ்வரண்சிங் கமிட்டி தெரிவித்துள்ள பிரேணைகளை காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்றிரவு அங்கீகரித்தது.

நாளைய தினம் இங்கு ஆரம்பமாகும் அஇகாக கூட்டம் இதை ஏற்குமாறு சிபாரிசு செய்திருக்கிறது.

இன்று காரியக் கமிட்டி கூட்டம் 4 மணி நேரம் நடைபெற்றது. ஸ்வரண்சிங் கமிட்டி சிபாரிசு செய்துள்ள எல்லா மாறுதல்களுக்கும் தலைமையினரின் முழு ஆதரவு கிடைத்துள்ளது என்பது காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு தெளிவாகப் புலப்பட்டது.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட ஸ்வரண்சிங் குழுவின் அறிக்கையில் காரியக் கமிட்டி யாதொரு மாறுதலையும் செய்யவில்லை என்று தெரிகிறது.

இந்தியாவை ஜனநாயக, மதச்சார்பற்ற, சோஷலிஸ்டு குடியரசாக ஆக்கவும், நிர்வாகம், சட்டசபை, நீதித்துறை ஆகிய ஒவ்வொன்றுக்கும் உரிய பங்கு என்ன என்பதற்கு மறு விளக்கம் அளிக்கவும், கல்வியையும் விவசாயத்தையும் மத்திய ராஜ்ய சர்க்கார்கள் இரண்டின் பொதுப் பொறுப்பாக ஆக்கவும் அரசியல் சட்டம் மாற்றப்படுவது ஏன் என்பதை விளக்கும் ஒரு சுருக்கமான அறிக்கையையும் (தீர்மானம்) காரியக் கமிட்டி வகுத்துள்ளது. இதை நாளை அ. இ கா. க. கூட்டத்தில் பிரேரிக்க அது விரும்புகிறது. ...

Summary

May 29, 1976: Is China's Policy on Kashmir Changing?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.