2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

3.11.1976: அரசியல் சட்ட திருத்த மசோதா அங்கீகாரம் - லோக சபையில் ஆதரவாக 366; எதிராக 4 வோட்டுகள்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

3.11.1976 - Dinamani

Updated On :

புதுடில்லி, நவ. 2 - அரசியல் சட்ட திருத்த மசோதா இன்று லோகசபையில் நிறைவேறியது. மசோதாவை ஆதரித்து 366 வோட்டுகளும், எதிர்த்து 4 வோட்டுகளும் கிடைத்தன.

மசோதாவில் இணைக்கப்பட்ட திருத்தங்களில் ஒன்று இம்மசோதாவுக்கு அரசியல் சட்டம் (42-வது திருத்த) மசோதா என்று வேறு நம்பர் அளிக்கிறது.

இம்மசோதா 44வது திருத்த மசோதாவாக சபையில் பிரேரிக்கப்பட்டது. பார்லிமெண்டில் ஏற்கனவே பிரேரிக்கப்பட்ட இரு அரசியல் திருந்த மசோதாக்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றில் ஒன்று கூட்டு கமிட்டி ஒன்றின் பரிசீலனையில் உள்ளது. எனவே இதனை 42 வது திருத்த மசோதாவாக புது நம்பர் அளிக்கும் அவசியம் ஏற்பட்டது.

அரசியலமைப்பு ஷரத்துக்களுக்கு இணங்க போதுமான மெஜாரிட்டியுடன் மசோதா நிறைவேறி விட்டதாக சபாநாயகர் பி. ஆர். பகத் அறிவித்தபோது அங்கத்தினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

கோகலே பதில்

மாறிக்கொண்டிருக்கும் சமுதாயத்தின் தேவைகளுக்கும், மக்களுடைய அபிலாஷைகளுக்கும் இசைவான மாறுதல்களைச் செய்ய சட்ட மசோதா விழைவதாக அமைச்சர் எச். ஆர். கோகலே தம்முடைய பதிவில் கூறினார்.

மசோதா நிறைவேறியதானது பார்லிமெண்டரி வரலாற்றில் மகத்தான கட்டம் என்று கோகலே கூறினார். "இது மனக்கசப்புக்கான நேரமல்ல. மிகவும் பயனுள்ள கட்டத்தை, தேசத்தின் முன்னேற்றத்தில் மிகவும் முக்கியமான கட்டத்தை மேற்கொள்ளப் போகும் தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று கோகலே கூறினார்.

பார்லிமெண்ட்தான் உயர்ந்த பீடம் என்பதை உறுதி செய்வதுடன் அடிப்படை உரிமைகளை விட கட்டளை கோட்பாடுகளுக்கு மசோதா அதிக முதலிடம் அளிக்கிறது. அத்துடன் பிரஜைகளுக்கு 10 அடிப்படைக் கடமைகளை நிர்ணயித்துள்ளது. நீதிமன்ற அதிகார வரம்புக்கு எல்லை நிர்ணயிக்கிறது. லோகசபை, சட்டசபைகளின் பதவிக் காலம் இப்போது 5 ஆண்டுகள் என்றிருப்பதை 6 ஆண்டுகளாக உயர்த்த வகை செய்கிறது. அபாயமான சட்டம், ஒழுங்கு நிலைமையைச் சமாளிப்பதற்காக எந்த மாநிலத்துக்கும் மத்திய ஆயுதப் படைகளை அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மந்திரிசபையின் ஆலோசனைப்படியே ராஷ்டிரபதி நடக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. அரசாங்க ஊழியர்களின் உத்தியோக விஷயங்களுக்காக நிர்வாக டிரிப்யூனல்களையும் பொருளாதாரக் குற்றங்களுக்காக மற்ற விசேஷ டிரிப்யூனல்களையும் அமைக்கவும் மசோதா வகை செய்கிறது.

அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தத் திருத்தத்தையும், எந்தக் காரணம் கொண்டும் எந்த கோர்ட்டிலும் வழக்காட முடியாது என்று மசோதா திட்டவட்டமாகக் கூறுகிறது.

பார்லிமெண்ட்தான் உயர்ந்த அமைப்பு என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் மசோதா தெளிவுப்படுத்துவதாக கோகலே கூறினார்.

"கோர்ட்டுகளின் அதிகாரங்கள், பணிகள் சம்பந்தமாக முதல்தடவையாக நாம் மாறுதல்களைச் செய்துள்ளோம்" என்று கோகலே கூறினார். இந்த மாறுதல்கள் தாங்கள் எந்த வரம்புக்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகின்றதோ அதற்குட்பட்டு நீதிமன்றங்கள் செயல்பட உதவும் என்றார்.

எதிர்காலத்தில் சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய மூன்று பிரிவுகளும் செயல்படுவதற்கான ஒரு கட்டுக் கோப்பை இந்த மாறுதல்கள் அளிக்கும் என்றார். "இந்த மசோதா மூலம் குடியரசுக் கொள்கைக்கு புதிய சக்தியையும், நம்முடைய பிரச்னைகளுக்கு புதிய அணுகுமுறையையும் அளிக்கிறோம்' என்று கோகலே கூறினார். ...

Summary

3.11.1976: Constitutional Amendment Bill approved – 366 votes in favour, 4 votes against in the Lok Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER