மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

21.9.1976: த. நா. அரசு வேலைக்கு ஆள் எடுப்பதில் அனாதை விதவைக்கு முன்னுரிமை

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

21.9.1976 - Dinamani

Published On :

திருச்சி. செப். 20 - அரசு வேலைகளுக்கு ஆள் எடுப்பதில், அனாதை விதவைகளுக்கு முன்னுரிமை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதியோர் பென்ஷன் 5-ம் விதியின்படி இவர்களின் வயது, தகுதிகள் தளர்த்தப்பட்டு இவர்கள் மனுக்கள் பரிசீலிக்கப்படும்.

இந்த விதிப்படி, வருவாய் இல்லாத வருவாய் தேட வழியில்லாத, 20 அதற்கு மேற்பட்ட வயதான உறவினர் (மகன், மகனின் மகன்) இல்லாதவர் அனாதை விதவை எனக் கூறப்படுகிறது.

இந்த உறவினர்கள் வருவாயில்லாதவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சந்தேகமற நிரூபிக்கப்பட வேண்டும்.

இந்த உத்தேசத்தை தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் ஒத்துக் கொண்டது.

சென்னையில் சர்க்காரியா கமிஷன் சாட்சி விசாரணை ஆரம்பம்

சென்னை, செப். 20- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஏழு பேர் மீதும் கூறப்பட்ட ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் இன்று காலை சென்னையில் தனது வீரணையைத் துவக்கியது.

கருணாநிதி மீதும் மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மீதும் எம். ஜி. ராமச்சந்திரன், எம். கல்யாண சுந்தரம் ஆகியோர் 1973-ஆம் ஆண்டு கொடுத்த புகார்களின் பேரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர். எஸ். சர்க்காரியா தலைமையிலான கமிஷனை 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய சர்க்கார் நியமித்தது. மே மாதம் முதல் சர்க்காரியா கமிஷன் புதுடில்லியில் பல முறைகள் கூடி விசாரணை நடைமுறை பற்றியும், பிரமாண வாக்குமூலங்கள் பெறுவது பற்றியும் முடிவு செய்தது. சாட்சிகளை விசாரிப்பதற்காக சென்னையில் இப்பொழுது விசாரணை நடத்துகிறது.

அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள "காஞ்சி" மாளிகையில் சரியாக காலை 9 மணிக்கு விசாரணை துவங்கியது. விசாரணையைக் காண பொதுமக்கள் அனுமதிச் சீட்டு மூலம் அனுமதிக்கப்பட்டனர். புகார் மனு கொடுத்த எம். ஜி. ராமச்சந்திரன், எம். கல்யாணசுந்தரம் ஆகியோர் விசாரணையைக் காண வந்திருந்தனர். விசாரணை நடந்த காஞ்சி மாளிகையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. ...

Summary

Priority for destitute widows in Tamil Nadu government recruitment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.