27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குழந்தையின்மைக் குறைபாடு அதிகரித்து வருவது கவலைக்குரியது

திருமணமான இளம் தம்பதியினரிடையே குழந்தையின்மைக் குறைபாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது ஜனனம் குழந்தைபேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வாணி சௌ

Updated On :5 மார்ச் 2013, 8:46 am IST

திருமணமான இளம் தம்பதியினரிடையே குழந்தையின்மைக் குறைபாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது ஜனனம் குழந்தைபேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வாணி சௌந்திரபாண்டியன் கூறினார்.

சென்னை நீலாங்கரையில் ஜனனம் குழந்தைபேறு மருத்துவமனை துவக்கவிழா நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது

குழந்தைபேறு இன்மை ஒரு குறைபாடு தானே தவிர நோய் அல்ல.அந்த குறைபாட்டை உரிய சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும்.இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் குழந்தையின்மை குறைபாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இதற்கு குறிப்பிட்ட சில காரணங்களைத் தவிர வேறுகாரணங்களும் இருக்கக்கூடும்.

ஆண்,பெண் இருவரும் குறித்த வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளாமல் தாமதமாக திருமணம் செய்து கொள்வது,சத்துள்ள இயற்கை உணவு வகைகளை சாப்பிடாமல் உணவுப்பழக்கங்களில் மாற்றம்,வேலை நேரம் மாறுதல்,அதிக உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்து கொண்டே வேலை செய்வது, வேலை,தொழில் தொடர்பான பதட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆண்களிடம் சராசரியாக இருந்த 60 லட்சம் விந்தணுக்களின் எண்ணிக்கை தற்போது சராசரியாக மூன்றில்  ஒரு பங்காக

குறைந்து இருப்பதும் ஆய்வுக்குரியது. உலக வெப்பமயம்,சுற்றுச்சூழல் பாதிப்பு,கதிர்வீச்சு,பதட்டமான வாழ்க்கைமுறை செல்போன்,கம்ப்யூட்டர்  பயன்பாடு,உணவு,காய்கறிகளில் ரசாயன உரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் காரணமாக இருக்கக்கூடும்.

குழந்தைபேறுக்கான  செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையில் தற்போது உலகஅளவில் சராசரியாக 40 முதல் 50 சதவிகிதம் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.

திருமணமான ஒரு ஆண்டில் கருத்தரிக்கவில்லை என்றால் தம்பதிகள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் வாணி சௌந்திரபாண்டியன்.

லண்டன் ஹார்லே ஸ்டிரீட் கிளினிக் மருத்துவரும் ஜனனம் செயற்கைக் கருத்தரிப்பு மையம் நிர்வாக இயக்குனருமான டாக்டர் செல்வாஅண்ணாமலை,சிட்டி கென்ட்ஸ்பெஷலிஸ்ட் கிளீனிங் குருப் நிர்வாக இயக்குனர் ஐன்பீத்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.