முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திமுக எம்.எல்.ஏ. மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இனி மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கவும், நாள்தோறும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Summary
Conditional bail for DMK MLA Markandeyan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு! பிற்பகலில் விசாரணை!

எலும்புகள் எல்லோருக்கும் உண்டு! திமுக எம்எல்ஏ பேச்சுக்கு வன்னி அரசு பதில்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: எம்.பி கனிமொழி கண்டனம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




