எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஈறுகளில் இரத்தம் கசிவது ஏன்?

பற்களைத் தாங்கிப்பிடித்து பற்களின் நலன் காப்பது ஈறுகள்தான். முறையாகப் பல் துலக்காததாதல் பல் இடுக்குகளில் உணவுத் துணுக்குகள் தங்கிவிடுவதாலும் அவை நொதித்து, பாக்டீரியாக்கள் பெருகுகின்றன.

News image
Updated On :19 செப்டம்பர் 2013, 12:44 am

அருண்

பற்களைத் தாங்கிப்பிடித்து பற்களின் நலன் காப்பது ஈறுகள்தான். முறையாகப் பல் துலக்காததாதல் பல் இடுக்குகளில் உணவுத் துணுக்குகள் தங்கிவிடுவதாலும் அவை நொதித்து, பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இதனால் அழுக்கு ஒரு மெல்லிய படலமாகப் படிந்து, காரையாகி பின்னர் சற்று உறிதியான காரை ஏற்பட்டு ஈறுகளைப் பாதிக்கிறது. பின்னர் இரத்தக் கசிவு ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஈறுகள் வீங்கி விடும். சிவப்பாகவும் காணப்படும். சிலருக்கு வாய் துர்நாற்றமும் இருக்கும். ஆனால், வலி இருக்காது. தாய்மை அடைந்த காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஸ்கர்வி போன்ற நோய்கள் இரத்த சோகை போன்றவையும் இத்தகைய பாதிப்புக்குக் காரணமாக அமையலாம்.

ஈறுகளில் இரத்தக் கசிவை கவனிக்காமல் விட்டால் இறுதியில் பற்களை இழக்க வேண்டியிருக்கும். முதல் நிலையாக பாக்டீரியாக்களையும் பற்களின் இடையே தங்கிவிட்ட உணவு துணுக்குகளயும் முழுமையாக அகற்ற வேண்டும். பின்னர் அழுக்குகள் காரைகளை முறையாக அகற்ற வேண்டும். சில நேரம் வலி ஏற்படாமலிருக்க சிறிதளவு மயக்க மருந்து ஊசி போட வேண்டியிருக்கும். இவற்றை முறையாக ஒரு பல் மருத்துவர் மூலமே செய்யவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.