எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இழந்த பற்களை மீண்டும் நிலையாகப் பொருத்த...

பல் மருத்துவத்தில் பற்களை பொருத்துவது ("இம்பிளாண்ட்') பிரபலமாகி வருகிறது.

News image
Updated On :14 பிப்ரவரி 2014, 11:05 pm

அருண்

பல் மருத்துவத்தில் பற்களை பொருத்துவது ("இம்பிளாண்ட்') பிரபலமாகி வருகிறது.

மேல் தாடையிலோ கீழ் தாடையிலோ அனைத்து பற்களும் இல்லாதவர்களுக்கு மேல் அண்ணம் முழுவதும் அக்ரிஸிக் பிளேட் மூலம் மூடி பற்களைப் பொருத்தலாம். ஆனால், சிலருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும்.

அதே போன்று கழற்றி பொருத்தும்படியான பற்களைப் பொருத்தலாம். இதுவும் சிலருக்குப் பிடிக்காது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு பற்களை பதிக்கும் முறையே (Teeth Implantation) சிறந்தது. இந்த செயற்கைப் பற்கள், இயற்கையான பற்களை போன்றே செயல்படும்.

ஒவ்வொரு தாடைக்கும் 4 முதல் 6 பதிக்கப்படும் பற்களைக் கொண்டு மொத்த பல் செட்டையும் நிலையானதாக பொருத்த முடியும். பொருத்தப்பட்டவர் இயற்கையான பற்களினால் கடிப்பது போல் உணர்வார்கள். எடுத்து மறுபடியும் வைக்கும் செயற்கைப் பல்லைக் காட்டிலும் நிலையாக பதிப்பது கொறிப்பதற்கு வசதியாக இருக்கும். பற்கள் ஆடுதல், ஈறுகளில் வலி மற்றும் வீக்கம் ஆகியவை நிலையாகப் பதிக்கும் செயற்கைப் பல்லால் தவிர்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.