தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் பழுதடையாமல் தடுக்க புதிதாக மரபணுக்குழு ஒன்றை நியூயார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சில வருடங்களுக்குப் பின் ஃபைப்ரோஸிஸ் மூலமாக சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு ஏற்படலாம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு இப்படிப்பட்ட ஆபத்தான நிலை வரும் முன் அதைக் கண்டறிய இந்த புதிய மரபணுக்கள் உதவுகின்றன என்று நியூயார்க் விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பின் படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே முதல் 3 மற்றும் 12 மாதங்களுக்குப் பின் திசு ஆய்வு (பயாப்ஸி) மேற்கொள்ளப்பட்டது. இந்த திசு மாதிரிகளை (பயாப்ஸி சாம்பிள்)’மைக்ரோ அரே’எனும் நுண்வரிசை ஆய்வு முறையில் சோதித்த போது இவற்றில் புதிதாக காணப்படும் மரபணு மற்றும் புரதங்களின் எண்ணிக்கை ஒரு சீராக கணக்கிடப்பட்டது. இந்த மரபணு எண்ணிக்கை முந்தைய திசு ஆய்வு முடிவுடன் ஒப்பிடப்பட்டு குரோனிக் அலோக்ராப்ட் டேமேஜ் இன்டெக்ஸ் ஸ்கோர் (ஆங்கிலத்தில் CADI- பாதிக்கக் கூடிய அளவிலான திசு வளர்ச்சி கணக்கீடு) கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டின் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே ஃபைப்ரோசிஸ் மூலம் உறுப்பு செயலிழக்கச் செய்யத்தக்க புதிய மரபணுக்காரணிகள் எவை எனும் முடிவுக்கு வர முடிந்தது.
தங்களது ஆய்வு முடிவை லான்சட் மருத்துவ இதழில் வெளியிட்ட நியூயார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனை தலைமை மருத்துவரும் இந்த ஆய்வுக்கு குழுவின் தலைவருமான மருத்துவர் பார்பரா மர்பி ’எங்களது ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ள புதிய மரபணுக்குழு எண்ணிக்கை மாறுபாடுகளைக் கொண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடையே பைப்ரோசிஸ் மூலம் சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதை முன்னரே கண்டறிந்து தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


