மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெரு வயிற்றைக் குறைத்து அழகான உடலமைப்பைப் பெற உதவும் கசாயம்

வயிறு பெருத்து அவதிப்படுகின்றீர்களா? கவலை வேண்டாம் இந்த கசாயத்தைக் குடித்துவாருங்கள் பெரு வயிறு காணாமல் போகும். 

News image

பசலைக்கீரை

Updated On :9 மார்ச் 2020, 10:19 am

வயிறு பெருத்து அவதிப்படுகின்றீர்களா? கவலை வேண்டாம் இந்த கசாயத்தைக் குடித்துவாருங்கள் பெரு வயிறு காணாமல் போகும். 

தேவையான பொருட்கள்

பாலக்  கீரை     -  ஒரு கைப்பிடி

வேப்பிலை      -   ஒரு கைப்பிடி

ஒமம்                -  10  கிராம்

மஞ்சள் தூள்     -  சிறிதளவு

செய்முறை

முதலில்  பாலக் கீரை மற்றும் வேப்பிலையை  நன்றாக சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள பாலக் கீரை , வேப்பிலை , ஓமம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக  கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை 150 மி.லி அளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் பெரு வயிற்றை குறைக்க உதவும்.

பெரு வயிற்று பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும்   இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் பெரு வயிறு குறைந்து அழகான உடலமைப்பை பெறலாம்

இரவு படுக்கப் போகும் முன் 

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell :  96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.