தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கல்லீரல் சார்ந்த அனைத்து குறைபாடுகளையும் குணப்படுத்த உதவும் சூரணம்

கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த சூரணத்தை தொடர்ந்து பயன்படுத்தி பலன் பெறலாம். 

News image

கீழாநெல்லி

Updated On :6 அக்டோபர் 2020, 7:35 am

கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்த சூரணத்தை தொடர்ந்து பயன்படுத்தி பலன் பெறலாம். 

தேவையான பொருள்கள்

அதிமதுரம்         -     100

கீழாநெல்லி (உலர வைத்தது) -  200 கிராம்

சீரகம்                 -   100 கிராம்

செய்முறை

முதலில் கீழாநெல்லி  இலைகளை தேவையான அளவு பறித்து நன்கு  உலர வைக்க வேண்டும்.

அதிமதுரத்தை  எடுத்து நன்கு உலர்ந்த கீழாநெல்லி இலையுடன் சேர்த்து அதனுடன் மேற்கூறிய அளவு சீரகத்தையும்  ஒன்றாக  கலந்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அதிமதுரம் மற்றும் கீழாநெல்லி பொடியாக கிடைத்தால்  தலா 100 கிராம் வாங்கிக் கொள்ளலாம்.

பயன்கள்

இந்த சூரணம் கல்லீரல் சார்ந்த அனைத்து குறைபாடுகளையும் குணப்படுத்த உதவும்  அருமருந்தாகும்

மேற்கூறிய குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை வேளையில் மட்டும் சாப்பாட்டிற்கு  முன்பு தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE

FOOD CONSULTANCY  CENTER

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.