பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அடிக்கடி உண்டாகும் தலைவலியைக் குணப்படுத்த உதவும் அருமருந்து

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவோர் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

News image
Headaches
Updated On :15 அக்டோபர் 2020, 12:24 pm

தினமணி

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவோர் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

அதிமதுரம்              -    100 கிராம்

சீரகம்                       -     100 கிராம்

செய்முறை

முதலில் அதிமதுரம் மற்றும் சீரகத்தை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய அதிமதுரம் மற்றும் சீரகத்தை  ஒன்றாக கலந்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் அடிக்கடி உண்டாகக் கூடிய தலைவலியைக் குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள்  மேற்கூறிய சூரணத்தை  தயார் செய்து தினமும் காலை  மற்றும் மாலை என இரண்டு வேளையும்  சாப்பாட்டிற்கு  பின்பு தலா இரண்டு கிராம்அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும். நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE

FOOD CONSULTANCY  CENTER

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.