குள்ளக்கார் அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
குள்ளக்கார் அரிசி - அரை கிலோ
சீரகம் - 100 கிராம்
கட்டிப் பெருங்காயம் - 2 கிராம்
இந்துப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரும்பு வானலியில் குள்ளக்கார் அரிசியைச் சிறுதீயில் வாசனை வரும் அளவு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
சீரகத்தையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள குள்ளக்கார் அரிசி, சீரகம் மற்றும் பெருங்காயம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் குள்ளக்கார் குருணைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து கஞ்சியாக வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் குழந்தைகள் முதல் முதியோர் வரை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு வலிமையைத் தரும். மேலும் இந்த குள்ளக்கார் கஞ்சியை 8மாத குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதில் சீரகம் சேர்த்திருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


