எடை குறைப்பு சிகிச்சைக்குப் பின் செக்ஸ் வாழ்க்கை சிறக்கும்!
‘ஒரு வெற்றிகரமான எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் உடல் மெலிவதோடு கூடுதல் பலனாக


‘ஒரு வெற்றிகரமான எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் உடல் மெலிவதோடு கூடுதல் பலனாக பல வருடங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக நீடிக்கும்’ என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
‘Bariatric’ (எடை இழப்பு) அறுவை சிகிச்சையின் மூலம் குறுகிய காலத்திலேயே ஒருவரின் பாலியல் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்க வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் இணை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கிரிஸ்டின் ஸ்டீபன் ஃபார்கோ. மேலும்
மேலும் இதன் பலன்கள் நீண்ட காலம் தொடரும் என்றும் ஸ்டீபன் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 80 சதவிகித பெண்கள் - - Bariatric அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள். அறுவை சிகிச்சைக்கு முடிந்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தங்கள் செக்ஸ் வாழ்க்கையை கவனிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.
அதன்படி ஒரு வருடம் கழித்து, பெரும்பாலான நோயாளிகள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் உள்ளது என பதிவு செய்தனர். இந்த முன்னேற்றம் அறுவை சிகிச்சைக்கு முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில், பெண்களில் சுமார் 52 வீதம் மற்றும் ஆண்கள் 58 சதவிகதத்தினர் திருப்தியான மற்றும் மகிழ்ச்சியான பாலியல் செயல்பாடு இருந்தது என்று பதிவு செய்திருந்தனர். இவர்களே தங்களின் எடை இழப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னர், முறையே, 31 சதவீதம் மற்றும் 28 சதவீதம் தான் திருப்தியடைய முடிந்தது என்று கூறி இருந்தனர்.
இதேபோல், 39 சதவிகதம் பெண்களுக்கும் மற்றும் 55 சதவிகிதம் ஆண்களும் அவர்கள் முன்பு இருந்ததை விட இந்த எடை இழப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு பாலியல் ஈடுபாடு அதிகரித்துள்ளதாக கூறினார்கள்.
இந்த அறுவை சிகிச்சை விளைவாக பாலியல் திருப்தி நோயாளிகளுக்கு கிடைப்பதால் அவர்களால் மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஓபிசிட்டி வீக், பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...