பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

2020-இல் 17.3 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள்: நிபுணர் தகவல்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, 2020-இல் நாட்டில் 17.3 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகவும், 8.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது

News image
Updated On :16 ஆகஸ்ட் 2016, 6:47 am

தினமணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, 2020-இல் நாட்டில் 17.3 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் உருவாகவும், 8.8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது என்று புற்றுநோயில் இருந்து விடுதலைக்கான ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் அனிதா ரமேஷ் கூறினார்.

இந்த அறக்கட்டளை சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், அவர் மேலும் பேசியது:-

தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின்படி, 12.5 சதவீதம் ஆண்களுக்கும், 11.11 சதவீதம் பெண்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதாவது, 8-இல் ஒரு ஆணுக்கும், 9-இல் ஒரு பெண்ணுக்கும் தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டில் உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோய்தான் முதலிடத்தில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

எனவே, புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளையும், ஆண்கள் பெருங்குடல் புற்றுநோய், விந்துப்பை புற்றுநோய்க்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறையே எச்.ஐ.வி.- எய்ட்ஸ் சிகிச்சைக்கும் பயன்படுகிறது என்றார். பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் டி.எஸ்.செல்வநாயகம், புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட 50-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.