புற்றுநோய் நோயாளிகளில் பலர் கீமோதெரபி அளிக்கப்படும் போது ரத்த உறைந்து போவதால் இறந்து விடுவது உண்மை. ரத்தம் உறைந்து போனதால்தான் (Blood clot) நோயாளி இறந்தார் என்று தெரிந்து இருந்தாலும், எதனால் திடீரென்று இந்த திடீர் க்ளாட் ஏற்பட்டது என்ற கேள்விக்கான பதிலை நியூசிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கீமோதெரபி சிகிச்சையின் போது கேன்சர் செல்களில் சின்ன சின்ன குமிழ்கள் உருவாகிறது. அப்போது தவிர்க்க முடியாது ரத்தம் உறையத் தொடங்குகிறது, ரத்த உறைவு அதிகரிக்கையில் அதுவே இறப்புக்கான காரணமாகிவிடுகிறது என்கிறாரக்ள் ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
புற்றுநோயாளிகளின் இறப்புக்கு முதல் காரணம் முக்கியமான உறுப்புக்களில் உருவாகும் கேன்சர் கட்டிகளின் கட்டுக்கடங்காத வளர்ச்சி. அடுத்த முக்கிய காரணம் த்ரோம்போஸிஸ் எனும் இந்த ரத்த உறைவுப் பிரச்னைதான் என்கிறது இந்த ஆய்வு. ரத்தம் உறைவதினால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, உயிர் வாழத் தேவையான பிரதான உறுப்புக்களுக்கு தேவைப்படும் சத்துக்கள் மற்றும் பிராணவாயு (ஆக்சிஜன்) செலுத்தமுடிவதில்லை. இதனால்தான் தவிர்க்க முடியாமல் நோயாளியின் உயிர் பிரிகிறது.
புற்றுநோய்க்கும் ரத்த உறைவுப் பிரச்னைக்கும் உள்ள தொடர்பை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனாலும் அதற்கான சரியான காரணம்தான் புலப்படாத ஒரு புதிராகவே இருந்து வந்தது என்கிறார் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் மெக்லென். சமீபத்தில் தான் அதற்கான காரணத்தை தன் குழுவினரின் உதவியுடன் கண்டறிந்தார் மெக்லென். கீமோதெரபியின் நடக்கையில் அழிந்து கொண்டிருக்கும் கேன்சர் செல்களில் தாமாகவே குமிழ்கள் உருவாகும். அவற்றின் அடர்த்திக் காரணமாக ரத்த உறைவு உடனடியாக ஏற்படுகிறது (Lipd rich bubbles). கணையம், இரைப்பை மற்றும் மூளைப் புற்றுநோய்களில் தான் இத்தகைய ரத்த உறைவு அதிகம் ஏற்படுகிறது என்றார் பேராசிரியர்.
இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கேன்சர் சிகிச்சையின் முக்கிய பகுதியான கீமோதெரபி அளிக்கப்படும்போது ரத்த உறைவைத் தவிர்க்கத் தேவைப்படும் தடுப்பான்களைப் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


