சிறுநீரகத்தை சுத்தமாக்க என்ன செய்யலாம்?
நமது உடலில் சிறுநீரகம் மிக மிக முக்கியமான உறுப்பாகும். சிறுநீரகத்தில்


நமது உடலில் சிறுநீரகம் மிக மிக முக்கியமான உறுப்பாகும். சிறுநீரகத்தில் தேவையற்ற நச்சுக்கள் சேர்ந்துவிட்டால் பலவிதமான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். சிறுநீரகத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தினமும் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும்.

கேரட் ஜூஸ், புதினா, தக்காளி மற்றும் செர்ரி பழச்சாறுகள், ஸ்மூதிக்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் அன்றாட உணவில் குதிரைவாலியைச் சேர்த்து வந்தால் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாமல் தற்காப்பாகச் செயல்படும்.
வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகிய பழங்கள் அடிக்கடி சாப்பிட்டு வர சிறுநீரகக் கல் ஏற்படாது.
கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.
சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் தேவை. ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தவிர, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்ஷியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கும் உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...