முகப்பரு பிரச்சனையா? கவலை வேண்டாம்

வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன
முகப்பரு பிரச்சனையா? கவலை வேண்டாம்
Updated on
1 min read

காய் :  கோவக்காய் 

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : கோவைக்காய் (10),  பீர்க்கங்காய் (200 கிராம் ) ,  வெண் பூசணி விதை (10 கிராம்) ,எலுமிச்சம் பழத்தோல் (1)   புதினா (சிறிதளவு) இவை  அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு மோர்  அல்லது தண்ணீர் நிறைய  ஊற்றி  நன்றாக அரைத்து ஜூஸாக்கி  வடிகட்டி  வைத்துக்கொண்டு  காலை  முதல் மாலை வரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும் . தீர்ந்துவிட்டால் மறுபடியும் தயார் செய்து குடித்து வரவும்.

கசகசா, முந்திரிப்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து  இரவு முகத்தில் தடவி  காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான  நீரில் கழுவி வந்தால் முகப்பரு மறையும்.  முகம் அழகு பெறும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com