இந்தியாவில் 100-ல் 70 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உகல சுகாதார நிறுவனம் நடத்திய முந்தைய ஆய்வு. இந்தியாவில் பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், ஹரியானா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா, பீஹார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய 15 மாநிலங்களிலுள்ள 50 சதவிகிதப் பெண்களுக்கு ரத்த சோகை உள்ளதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. ஆசிய நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர்த்து ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 75 சதவிகிதம் பேர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
‘பதினொரு வயதில் இருந்து 35 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முக்கியமான விஷயங்களை கடக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் கவனத்துடன் இருந்தால் எதிர்காலத்தில் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்’ ஆனால் இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களை அதிகம் தாக்கும் பிரச்னை ரத்த சோகை. இந்த ரத்த சோகை உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் வருகிறது. உலகில் உள்ள மக்கள் தொகையில் 25 சதவிகிதம் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடல் முழுவதும் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது ஹீமோகுளோபின்கள்தான். ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது ஹீமோகுளோபினின் செயல்திறன் குறைந்துவிடும். அதனால் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடுகிறது. இதனைத்தான் ரத்தசோகை என்கிறோம்.
தினமும் உடலுக்கு 10 முதல் 15 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான அளவில் இரும்புச் சத்து கிடைக்கும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இரும்புச் சத்து குறைபாடு, மரபுவழியாக ரத்தம் தொடர்பான நோய்கள், சிறுநீரகச் செயலிழப்பு, உயிர்ச் சத்து குறைபாடு போன்றவையும் ரத்த சோகை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.
சராசரி ஹீமோகுளோபின் அளவு
ஆண்களுக்கு – 14.5 முதல் 15.5gm/dl, பெண்களுக்கு – 13.5 முதல் 14.5 gm/dl, குழந்தைகளுக்கு – 16 முதல் 17 gm/dl
ரத்த சோகை ஏற்படுவதற்கான அறிகுறியும் காரணமும்
கண்களைச் சுற்றி கருவளையும், அடிக்கடி ஜூரம், மூலம் சம்பந்தட்ட வியாதிகள், கல்லீரல் நோய்கள், அதிமகான உதிரப்போக்கு, காசநோய், புகையிலை பழக்கம் போன்ற பிரச்னைகளின் பக்கவிளைவாக ஒருவருக்கு ரத்த சோகை ஏற்படலாம். ரத்த சோகை வர பல காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் இரும்புச்சத்துக் குறைபாடே இதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.
ரத்த சோகையின் அறிகுறி - சோர்வு, உற்சாகம் இன்மை, உடல் மெலிவு. உடல் வெளுத்துப் போவது, மெலிவது, அடிக்கடி பெருமூச்சு ஏற்படுவது, மயக்கம் வருஅது, தலை சுற்றல், உணவில் நாட்டமின்மை, மாதவிடாய் சமயங்களில் அதிகமான உதிரப்போக்கு, சிலருக்கு அது அப்படியே நேர்மாறாக குறைவாக இருப்பது, மூச்சு வாங்குவது, உடல் சோர்வு இவையே பொதுவான காரணங்கள்.
உணவே நல்மருந்து
ஆட்டு இறைச்சி, அதன் எலும்பு, ஈரல், குடல் கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம் பழம் போன்ற இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். இதனுடன், வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்தை கிரகிக்க அது உதவும்.
அரைக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வெந்தயக் கீரை, அகத்திக் கீரை முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களில் அத்திப் பழக், மாதுளை, உலர் திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவை அடிக்கடி சாப்பிட வேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


