தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோலில் உண்டாகக் கூடிய சிவந்த மற்றும் வீக்கத்துடன் உண்டாகும் தடிப்புத் தன்மை நீங்க 

சோடியம் ,கார்போஹைட்ரேட் நார்ச்சத்து ,சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6, சி, இ, கே)

News image
Updated On :23 நவம்பர் 2018, 5:16 am

கோவை பாலா

சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6, சி, இ, கே)

தீர்வு : வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு (100 கிராம்) அதனுடன் முருங்கை விதை (10)  , கோவக்காய் (10), புதினா (சிறிதளவு) இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இளம் பிஞ்சு வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை தேவையான அளவு எடுத்து நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து அதனுடன் புதினா தழையை பொடியாக நறுக்கி பொறியலுடன் கலந்து  மதிய வேளை உணவில்  அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.