சுடச்சுட

  

  மஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல், வாயில் புண்  மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு குணமாக

  By கோவை பாலா  |   Published on : 20th August 2018 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  images_(29)

  அறிகுறிகள் : அதிகப்படியான உடல் சூட்டினால் சளி மஞ்சள் நிறமாக வெளியேறும். எதிர்ப்பு சக்தியே தடுமாறும் அளவிற்கு சளி அதிகமாகியுள்ளது என்று பொருள். இதனால் வாயில் புண்ணும், பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு  அனைத்தையும் குணமாக்க...

  மண்டலம் - நிணநீர் மண்டலம்
  காய் - பீர்க்கங்காய்
  பஞ்சபூதம் - நீர்
  மாதம் - ஐப்பசி
  குணம் - உள்முகம்

  சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன

  தீர்வு

  பீர்க்கங்காய்  தேங்காய் ஜீஸ்

  ஒரு பீர்க்கங்காயை தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காயைத் துருவி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு காலை மதியம் இரவு என மூன்று வேளையும் 150 மில்லி அளவு எடுத்து வரவும்.

  ஒரு வேளை உணவில் பீர்க்கங்காயை தோலுடன் நறுக்கி நீராவியில் வேக வைத்து பின்பு அதனுடன் தேங்காயைத் துருவி பொறியலாக சாப்பிட்டு வந்தால் மஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல் , வாயில் புண்  மற்றும் பல் ஈறுகளில்  உண்டாகும் இரத்தக் கசிவு  ஆகியவற்றைக் குணப்படுத்தலாம். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

  வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai