பூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என்று தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், அதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
முளை கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:
முளை கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், அது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடலில் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கிறது.
ரத்தம் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இது சரும சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, முதுமைத் தோற்றத்தை தாமதமாக்குகிறது.
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த் தொற்றுகள் மூலம் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.
உடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்னைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்னைகளை குறைக்க உதவுகிறது.
நரம்பு செல்கள் சீரழிவதைத் தடுத்து, உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, அதன் செயல்பாட்டை சீராக்கி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கபில் தேவ் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்..! விரைவில் டாப் 10ல் இடம்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!

தென்னாப்பிரிக்க அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பதே எனது இலக்கு: டேவிட் மில்லர்

லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜர்!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju


