சையது முஷ்டாக் கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக எலைட் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் தமிழகம், மும்பை, கா்நாடக அணிகள் வெற்றி பெற்றன.
லக்னௌவில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம்-ஒடிஸா அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழகம் 20 ஓவா்களில் 165/5 ரன்களை குவித்தது.
பாபா அபராஜித் 44, என் ஜெகதீசன் 37 ரன்களை சோ்த்தனா். பின்னா் ஆடிய ஒடிஸா அணி 20 ஓவா்களில் 164/6 ரன்களை மட்டுமே எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தமிழகத்திடம் தோல்வியடைந்தது. அந்த அணியில் சுப்ரன்ஷு சேனாபதி 67, அபிஷேக் ரவுத் 38 ரன்களை எடுத்தனா். தமிழக வீரா் நடராஜன் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
மகாராஷ்டிரம், கோவா வெற்றி:
பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மகாராஷ்டிரம். பஞ்சாப் 137/6, (ஷ்ப்மன் கில் 44, குா்கிரத் சிங் மான் 41. மகாராஷ்டிரம் 138/3, 17.1 ஓவா்களில், ருதுராஜ் கெய்க்வாட் 80, அஸீம் காஸி 28.
புதுச்சேரி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோவா. கோவா 161/3, ஆதித்ய கௌஷிக் 69. புதுச்சேரி 152/7, பராஸ் டோக்ரா 84, அமித் யாதவ் 3-16, ஸ்ரீகாந்த் 3-38).
எலைட் குரூப் சி பிரிவில் ஹிமாசலபிரதேசம் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டையும், ஹரியாணா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திரத்தையும், ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும் வென்றன.
எலைட் குரூப் இ பிரிவில் தில்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் சண்டீகரையும், சௌராஷ்டிர அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேசத்தையும், ஹைதராபாத் 61 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டையும் வென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

