தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

 இன்றைய மருத்துவ சிந்தனை 22.11.2016சீரகம்

 சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில்

News image
Updated On :23 நவம்பர் 2016, 6:15 am

டாக்டர் வெங்கடாசலம்

சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , பித்தம் குறையும் , இளநரை மறையும்.

சீரகம் , சோம்பு , வாய்விளங்கம் , ரோஜாப்பூ - அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும் , இதில் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , உடல் பருமன் குறையும்.

சீரகம் , ஒமம் - இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்துக் குளித்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.

சீரகம் , குருந்தொட்டி வேர் - இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து , கஷாயம் காய்ச்சி மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் குளிர்க் காய்ச்சல் உடனே குணமாகும்.

சீரகத்தைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டால் , உடல் சூட்டால் உண்டாகும் வயிற்று வலி குணமாகும்

- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.