இன்றைய மருத்துவ சிந்தனை - 24.11.2016 கொத்தமல்லி

கொத்தமல்லியோடு, மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.
இன்றைய மருத்துவ சிந்தனை - 24.11.2016 கொத்தமல்லி
Updated on
1 min read

கொத்தமல்லி

கொத்தமல்லியோடு, மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் . ரத்த அழுத்தமும் சீராகும்.

கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.

கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி மற்றும் துளசியைக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லி, சீரகம் (2 ஸ்பூன் ) - இரண்டையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தலைவலி குணமாகும்.

கொத்தமல்லியைப் பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்

அன்புடன்
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com