இன்றைய மருத்துவ சிந்தனை: நாயுருவி

இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: நாயுருவி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


நாயுருவி:

  • நாயுருவி இலையை உலர்த்திப் பொடி செய்து , தினமும் இருவேளை இரண்டு கிராம் அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்த்தொற்று, இதய வால்வுகளில் கொழுப்பு படிதல், இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும்.
  • நாயுருவி விதையை(10 கிராம்) பொடி செய்து , துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
  • நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து , உடலில் பூசிக்கொண்டால் தேமல் , படை போன்றவை குணமாகும்.
  • நாயுருவி இலையுடன் ஜாதிக்காயைச் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவிவந்தால் தேமல் மறையும்.
  • நாயுருவி செடியின் விதைகளைக் காயவைத்து இடித்துப் பொடி செய்து சலித்துக்கொள்ளவும்.இதை தினமும் இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
  • நாயுருவிச் செடியைப் பறித்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சி இறக்கி பாட்டிலில் ஊற்றிவைத்து ,தினமும் காலையில் மட்டும் குடித்துவந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
  • நாயுருவிச் செடியின் இலைகளை இடித்துச் சாறு எடுத்து காதில் இரண்டு துளிகள் விட்டால் , காதில்  சீழ் வடிவது நிற்கும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com