கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்க!

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஆப்பிளையே மிஞ்சும் சத்துக்கள் என்று தெரியுமா? அப்படி

News image
Updated On :11 மார்ச் 2017, 4:16 pm IST

ஸ்ட்ராபெர்ரி லேசான புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும் ஒரு வெளிநாட்டுப் பழம். இப்பழத்தின் தாயகம் ஐரோப்பா ஆகும்  சமீப வருடங்களாக நம்மூரில் கிடைக்கிறது. இந்தப் பழம் கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும்.  
சத்துகள் 

ஸ்ட்ராபெர்ரி 98 சதவிகிதம் வைட்டமின் சி-யைப் பெற்றுள்ளது. இப்பழத்தில் வைட்டமின்கள் ஏ,சி,இ,கே, ரிபோஃப்ளோவின் (பி2), நியாஸின் (பி3), பேண்டோதெனிக் அமிலம் (பி5), பைரிடாக்ஸின் (பி6) ஆகியவையும், தாது உப்புக்கான பொட்டாசியம், கால்சியம், இரும்புசத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம் ஆகியவை உள்ளன. கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன்கள், நார்சத்துக்கள், ஃபோலேட்டுகள் ஆகியவையும், பைட்டோ நியூட்ரியன்களான பீட்டா கரோட்டின்கள், லுடீன் ஸீக்ஸாதைன் ஆகியவையும் காணப்படுகின்றன.

இப்பழத்தினை வாங்கும்போது அடர் சிவப்பு நிறத்தில் பளபளபாகவும், தடிமனாகவும், தொப்பி வடிவ இலைகளுடன் இருக்குமாறு வாங்க வேண்டும். இப்பழமானது பறித்த பின்பு பழுப்பதில்லை. எனவே மஞ்சள் கலந்த பச்சை வண்ணப் பழங்களை வாங்க வேண்டாம். பழத்தின் மேற்புறத்தில் காயங்களோ, தடிப்புகளோ உள்ள பழங்களை வாங்கக் கூடாது. இப்பழங்களை குளிர்பதனப் பெட்டியில் வைக்கும் முன்பு காயமடைந்த மற்றும் அழுகிய பழங்களை நீக்கி விடவேண்டும். ஏனெனில் இப்பழங்கள் நல்ல பழங்களையும் கெட்டுப் போகச் செய்துவிடும். குளிர்பதனப் பெட்டியில் இப்பழத்தினை ஓரிரு நாட்கள் வைத்துப் பயன்படுத்தலாம்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரியின் சத்துக்கள்

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஆப்பிளையே மிஞ்சும் பலன்கள் உள்ளன என்று தெரியுமா? அப்படி என்ன அதில் இருக்கிறது என்று பார்ப்போம்.

கண்கள் பாதுகாப்பிற்கு

இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் வயதான காலத்தில் ஏற்படும் கண்புரை நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் கண் லென்ஸில் உள்ள புரோட்டீன்களை பாதிப்படைச் செய்கின்றன.

ஆனால் வைட்டமின் சி-யானது புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து கண்ணின் லென்ஸைப் பாதுகாக்கிறது.  

ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் ஃப்ளோவனாய்டுகள், பீனாலிக் பைட்டோகெமிக்கல்கள், எல்லாஜிக் அமிலம் ஆகியவை கண்தசை சிதைவு, பார்வை நரம்புச் சிதைவு, கண் தொற்று நோய் போன்ற கண் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க்கும் சக்தி ஸ்ட்ராபெர்ரிக்கு உண்டு. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலே நம்மை தொற்று நோய் கிருமிகள், நுண்உயிர் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. விட்டமின் சி-யானது நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக வழங்குகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை விட்டமின் சி-யானது நன்கு செயல்பட ஊக்குவிக்கிறது. எனவே வைட்டமின்-சியை அதிகம் கொண்டுள்ள ஸ்ட்ராபெர்ரியை உண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை இயற்கை வழியில் பெறலாம்.

புற்று நோயிலிருந்து பாதுகாப்பு

விட்டமின்-சி, ஃபோலேட்டுக்கள், ஃப்ளவனாய்டுகளான ஆந்தோசையானின்ஸ், க்யூயர்சிடின் போன்றவை புற்று நோயை எதிர்க்கும் பண்புகளைப் பெற்றுள்ளன.

ஸ்ட்ராபெர்ரியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் அவை புற்றுச் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. எனவே ஸ்ட்ராபெரியை உண்டு கான்சர் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. இது செல் அழிவை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

இப்பழத்தில் காணப்படும் நார்சத்துகள், ஃபோலேட்டுகள், வைட்டமின் சி, பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை இதய ரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன.

இப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-யின் தொகுப்பு இதயத் தசைகளை வலுப்பெறச் செய்வதோடு இதயத்தை நன்கு செயல்படச் செய்கிறது.

- சுஜாதா ராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.