/
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- சர்க்கரை நோய்க்குத் தீர்வு லவங்கப் பட்டை, சிறுகுறிஞ்சான் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 2கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
- நுரையீரல் சார்ந்த பிரச்சனை தீர லவங்கப்பட்டை (100கிராம்) மற்றும் மிளகு, திப்பிலி தலா 10கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி, தலைபாரம் போன்றவை குணமாகும்.
- வயிற்றுவலி உடனே தீர லவங்கப் பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் அளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே தீரும்.
- அதிக இரத்தப்போக்கு நிற்க லவங்கப் பட்டையைப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
- கெட்ட கொழுப்புகள் கரைய லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
- அனைத்து வாயுக் கோளாறுகள் நீங்க லவங்கப் பட்டை, சுக்கு, ஓமம் மூன்றையும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான வாயுக் கோளாறுகளும் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



