மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: பச்சை பட்டாணி

உடல் சோர்வு நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 5:27 am

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பச்சை பட்டாணி:

  • குழந்தைகளின் ஆரோக்கியம் பெற பச்சை பட்டாணி (3 தேக்கரண்டி) , கேரட், புதினா, பீன்ஸ் இவை அனைத்தையும்  சேர்த்து வேகவைத்து அதனுடன் உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் கொடுத்து வந்தால்  குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
  • பச்சை பட்டாணியை (3 தேக்கரண்டி அளவு) வேகவைத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு சேர்த்து வாரம் இரண்டு  முறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.
  • மனநல பிரச்சனையில் இருந்து விடுபட பச்சைப் பட்டாணி (100 கிராம்) எடுத்து வேகவைத்து  சுண்டல் செய்து சாப்பிட்டு வந்தால் மனநலம் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடைவார்கள்.
  • இதயநோய் , பக்கவாதம் வராமல் தடுக்க பச்சை பட்டாணி(100 கிராம்) எடுத்து காய்கறிகளுடன் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் இவற்றில் உள்ள  கரையாத நார்சத்து நம் உடம்பில் உள்ள  கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
  • உடல் சோர்வு நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பச்சை பட்டாணியை  தினசரி உணவில் சேர்த்து கொண்டு வரும் பொழுது இவற்றில் உள்ள இரும்புசத்து அதிகம்  இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .
  • ரத்தம் , நுரையீரல் , ஆசனவாய் புற்றுநோய் வராமல் தடுக்க தினந்தோறும் பச்சை பட்டாணியை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள விட்டமின் (சி ) , ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய்களும் வராமல் தடுக்கிறது.
  • வயதானவர்களுக்கு உண்டாகும் கண்புரை வளர்ச்சியை குறைக்க பச்சை பட்டாணியை வயதானவர்கள் வேகவைத்து  தினமும் சாப்பிட்டு வந்தால் இவற்றில் லுட்டின்(Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) ,  வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படும் கண்  புரை வளர்தலை குறைக்கிறது.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.