கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: ஆடு தீண்டாப்பாளை

உடல் வலுப்பெற

News image
Updated On :8 மார்ச் 2018, 12:22 pm IST

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • உடல் வலுப்பெற ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி (2 ஸ்பூன்) எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு செம்பு நீரை ஊற்றி ஒரு டம்ளராக சுண்டவைத்து கஷாயமாக்கி வடிகட்டி அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
  • வயிற்றுப் பூச்சிகள் ஒழிய ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து வைத்துக் கொண்டு (1ஸ்பூன்) அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து இரவு படுக்கப்போகும் முன் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
  • தலைமுடி உதிர்வை தடுக்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
  • மாதவிடாய் வயிற்று வலி, ஒழுங்கற்ற இரத்தப்போக்கு சீராக ஆடுதீண்டாப்பாளை இலைகள் (5) எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு செம்பு தண்ணீரை ஊற்றி ஒரு டம்ளராக சுண்டவைத்து கஷாயமாக்கி ஒருவேளை குடித்து வந்தால் மாதவிடாய்  வயிற்று வலி , ஒழுங்கற்ற இரத்தப்போக்கு  பிரச்சனைகள் தீரும்.
  • ஆடுதீண்டாப் பாளையை அரைத்து (10 மி.லி)அளவு சாறு  எடுத்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால்  ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.
  • ஆரோக்கியமான சுகப்பிரசவம் பெற ஆடுதீண்டாப்பாளை வேர் (2 கிராம்) எடுத்து பொடி செய்து தினந்தோறும்  ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து ஒரு வேளை குடித்து வந்தால் ஆரோக்கியமான சுகப் பிரசவம் ஏற்படும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.