/
அகத்திக் கீரை பூண்டு புழுங்கலரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
அகத்திக் கீரை - 2 கைப்பிடி
புழுங்கலரிசி - 150 கிராம்
பூண்டுப் பல் - 10
மிளகு - 5
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அகத்திக் கீரை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- அதில் மிளகு, பூண்டு ஆகியவற்றைத் தட்டி போட்டு அதனுடன் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- அகத்திக் கீரை நன்கு வெந்தவுடன் அந்த தண்ணீரை மற்றும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- வடிகட்டி வைத்துள்ள தண்ணீரில் புழுங்கலரிசியைச் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக்கிக் கொள்ளவும்.
- கஞ்சி பதம் வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சியை உடல் பருமனை குறைக்க விரும்புவர்களும், தொப்பையை குறைக்க விரும்புவர்களும் ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் பருமன் மற்றும் தொப்பை குறைந்து அழகான உடலமைப்பை பெறுவார்கள்.
- படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
- அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
- பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


