வாழைப் பூ கொத்தவரங்காய் கஞ்சி
தேவையான பொருட்கள்
வாழைப்பூ - 50 கிராம்
கொத்தவரங்காய் - 10
காட்டுக் கோதுமை - 100 கிராம்
தண்ணீர் - ஒரு லிட்டர்
தேன் - 2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் வாழைப்பூவை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
- கொத்தவரங்காய் மற்றும் வாழைப் பூவை பொடியாக நறுக்கி நீராவியில் வேகவைத்துக் கொள்ளவும்.
- காட்டு கோதுமையை உடைத்து நொய்யாக்கிக் கொள்ளவும்.
- உடைத்த கோதுமை நொய்யரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்கவும்.
- நன்கு வெந்த கோதுமை நொய்யரிசியுடன் வேகவைத்து அரைத்து வைத்துள்ள கொத்தவரங்காய் மற்றும் வாழைப்பூவைச் சேர்த்து நன்கு வேக வைத்து கஞ்சியாக்கி இறக்கி வைக்கவும்.
- இறக்கி வைத்துள்ள கஞ்சியுடன் இரண்டு தேக்கரண்டி தேனைச் சேர்த்து கலக்கி பருகவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை பருத்த உடலை இளைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் பருத்த உடலையும் இளைக்க உதவும் அற்புதமானக் கஞ்சி.
படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


