மணத்தக்காளிக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு
மிளகு - 10
சீரகம் - ஒரு ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
தனியா - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 50 கிராம்
வெந்தயம் - அரை ஸ்பூன்
மஞ்சள், உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் கீரையை நன்கு அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை போடவும்.
- பின்பு அதில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, தனியா, வெந்தயம் ஆகியவற்றைத் தட்டி கீரையுடன் சேர்க்கவும்.
- நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மஞ்சள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்து குடிக்கவும்.
பலன்கள்
இந்த சூப்பை குடற்புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குடற்புண்களை ஆற்றுவதில் இதற்கு மிஞ்சிய மருந்தே இல்லை. உணவும் இல்லை.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


