பொன்னாங்கண்ணிக் கீரை சூப்
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணிக் கீரை - 2 கட்டு
தக்காளி - 2
வெங்காயம் - 2
பூண்டு - 5 பல்
சீரகம், மிளகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
வெண்ணெய் - 50 கிராம்
மைதா மாவு - 2 ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - ஒரு ஸ்பூன்
செய்முறை
- முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
- வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பின்பு அதில் நறுக்கிய வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கீரை, கொத்தமல்லி இலை அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின்பு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கொதிக்கவிட்டு பிறகு அதில் எலுமிச்சம்பழச் சாறு விட்டு இறக்கி வடிகட்டவும்.
- இறுதியில் ஒரு வாணலியில் சிறிதளவு வெண்ணெய் போட்டு உருகியதும் மைதா மாவைத் தூவவும். சற்று சிவந்ததும் வடிகட்டி வைத்துள்ள சூப்பை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பலன்கள் - இந்த சூப்பை நாட்பட்ட இருமல் , உடல் உஷ்ணம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்த உன்னதமான சூப்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

