கொத்தவரைக்காய் குதிரைவாலி அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
குதிரை வாலி அரிசி - 100 கிராம்
கொத்தவரங்காய் - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் கொத்தவரங்காயை நன்கு கழுவி நறுக்கி நீராவியில் வேகவைத்து அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
- கொள்ளுவை வெறுமையாக வாணலியில் வறுத்து நீரில் மூழ்கும் வரை போட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- குதிரை வாலி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஊற வைத்த கொள்ளுவையும் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும். அவை நன்கு குழைந்து வெந்ததும் அதனை நன்கு கடைந்து அதில் அரைத்து வைத்துள்ள கொத்தவரங்காய் ஜூஸை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை அதிக கொழுப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிகுந்த அற்புதமானக் கஞ்சி.
மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் கொத்தவரங்காய் குதிரைவாலிக் கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


