வெண்பூசணி வரகுக் கஞ்சி
தேவையான பொருட்கள்
வரகு - 100 கிராம்
வெண் பூசணிக்காய் - 100 கிராம்
பூண்டு - 10 பல்
சுக்கு - ஒரு துண்டு
சீரகம் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
பசும் பால் - 100 மி.லி
செய்முறை
- வெண்பூசணிக் காயை தோல் விதையோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
- வரகு அரிசியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 200 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- வரகு அரிசி பாதி வெந்த நிலையில் இருக்கும் போது அதில் பூண்டு, ஒரு துண்டு சுக்கு, சீரகம், வெந்தயம், பசும் பால் மற்றும் அரைத்து ஜூஸாக்கி வைத்துள்ள வெண்பூசணிக் காயைச் சேர்த்து வேக விடவும்.
- நன்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
- இதனோடு கறிவேப்பிலை புளித் துவையல் செய்து சாப்பிட்டால் சுவை கூடும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வரும் நோய்களை விரட்டி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் அற்புதக் கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


