முருங்கைப் பட்டை திப்பிலி பால் கஞ்சி
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி நொய் - 100 கிராம்
முருங்கைப் பட்டை - 10 கிராம்
திப்பிலி - 10
பால் - 500 மி.லி
பூண்டு - 5 பல்
மிளகு - 10
செய்முறை
- முதலில் புழுங்கலரிசி நொய்யை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- பாலை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
- முருங்கைப் பட்டை, பூண்டு, மிளகு மற்றும் திப்பிலி நான்கையும் சேர்த்து ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும்.
- நொய்யரிசியை நன்கு குழையும்படி வேக வைத்தப் பின்பு அதில் காய்ச்சிய பால் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை கப சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப் பட்டவர்கள் ஒரு வேளை உணவாகவோ அல்லது மருந்தாகவோ எடுத்துக் கொள்வதன் மூலம் கபத்தன்மையிலிருந்து விடுபட முடியும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


