தேவையான பொருட்கள்
சாமை அரிசி - 100 கிராம்
அரசாணிக்காய். - 100 கிராம்
தேங்காய்ப் பால். - 300 மி.லி
உளுந்து. - 50 கிராம்
பாசிப் பருப்பு. - 20 கிராம்
பனைவெல்லம். - 100 கிராம்
சுக்கு, ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல - ஒரு கைப்பிடி
செய்முறை
- முதலில் சாமை அரிசி, உளுந்து, பாசிப் பருப்பு மூன்றையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- அரசாணிக்காயை தோலோடு துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
- பனை வெல்லத்தை கரைத்து கரைசலாக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடித்துள்ள சாமை அரிசியைப் போட்டு அதில் 200 மி.லி தேங்காய்ப் பாலை ஊற்றி மேலும் அதில் 150 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு குழையும் படி வேக வைக்கவும்.
- சாமை அரிசி நன்கு வெந்தவுடன் அதனை நன்கு மசித்து அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸ் , மீதியுள்ள தேங்காய்ப் பால் மற்றும் பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
- இந்தக் கஞ்சியை சூடாக இருக்கும்பொழுது மிக அருமையாக இருக்கும்.
பயன்கள்
இந்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுக்கும் ஆரோக்கியக் கஞ்சி.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


