வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும் உணவு இது
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
திணை அரிசி - 100 கிராம்
பூண்டு. - 10 பல்
மிளகு - 10
மல்லித் தழை. - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் திணை அரிசியை லேசாக வறுத்து உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
- முடக்கத்தான் கீரையை அலசி ஆய்ந்து அரைத்து சாற்றை வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.
- பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் திணை குருணையைச் சேர்த்து வேக வைக்கவும்.
- நன்கு வெந்து கஞ்சி பக்குவம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் முடக்கத்தான் சாற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சியை வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்க ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
- மேலும் சிறுநீரக குறைபாட்டினால் உண்டாகும் கால் வீககம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கஞ்சியை மருந்தாக ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


