பூசணிக்காய் விதை குடைவாழை அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
வெண் பூசணி விதை - 100 கிராம்
அரசாணிக்காய் விதை - 100 கிராம்
குடைவாழை அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
தயிர் - சிறிதளவு
செய்முறை
- முதலில் வெண் பூசணி விதை, அரசாணிக்காய் விதை மற்றும் வெந்தயம் மூன்றையும் வாணலியில் லேசாக வறுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
- குடைவாழை அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
- பாசிப்பருப்பையும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் ஊறவைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.
- அரிசி நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியில் பத்து கிராம் அளவு எடுத்து கஞ்சியுடன் சேர்த்து கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து அதில் தயிர் சேர்த்து பருகவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சி வயிற்றுப் புண், செரிமானக் கோளாறு மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு உன்னதமான உணவுக் கஞ்சி.
இதனை தினமும் ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் ஜீரணசக்தியை அதிகரித்து குடல் சார்ந்த நோய்களை நீக்கும் அதிஅற்புதமான உணவுக் கஞ்சி.
படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


