சிறுநீரகம் சார்ந்த குறைபாடுகளையும் சீர் செய்ய உதவும் அருமருந்து

இளைத்த உடலைப் பெருக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளைச் சீர் செய்யவும் இந்த சூரணம் பயன்படுகிறது. பயன்படுத்திப் பலனடையுங்கள். 
kidney problems
kidney problems
Updated on
1 min read

இளைத்த உடலைப் பெருக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளைச் சீர் செய்யவும் இந்த சூரணம் பயன்படுகிறது. பயன்படுத்திப் பலனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

கடுக்காய் தோல்           -     10

அதிமதுரம்                      -    100 கிராம்

வெள்ளரி விதை            -    100 கிராம்

செய்முறை

முதலில்  கடுக்காயைக் கொட்டையை நீக்கி தோல் எடுத்துக் கொள்ளவும். வெள்ளரி விதையை லேசாக வறுத்துக் கொள்ளவும். அதிமதுரத்தையும் சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு  மூன்று பொருட்களையும் தனித்தனியாக அரைத்து பின்பு ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

கடுக்காய் தோல் கிடைக்கவில்லையென்றால் கடுக்காய் பொடி 100 கிராம் வாங்கி மேற்கூறிய பொருட்களோடு கலந்து கொள்ளவும். 

பயன்கள்

இந்த சூரணம் இளைத்த உடலைப் பெருக்கவும் மற்றும் சிறுநீரகம் சார்ந்த குறைபாடுகளையும் சீர் செய்ய உதவும் அருமருந்தாகும். உடலைப் பெருக்க நினைப்பவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து  காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ஐந்து கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரவும். 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். பின்பு தேவையறிந்து எடுக்கலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com