தீராத மலச்சிக்கலைப் போக்க இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.
தேவையான பொருள்கள்
லவங்கப்பத்திரி. - 100 கிராம்
நிலாவரை. - 100 கிராம்
வாய்விளங்கம். - 100 கிராம்
செய்முறை
முதலில் லவங்கப்பத்திரி , நிலாவரை மற்றும் வாய்விளங்கம் மூன்றையும் மேற்கூறிய அளவு எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அனைத்தையும் தனித்தனியாக அரைத்துப் பொடி செய்து பின்பு ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் தீராத மலச்சிக்கலைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து வைத்துக்கொண்டு தினமும் இரவில் மட்டும் சாப்பிட்ட பின்பு ஐந்து கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத புதுவை!

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


