கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தும்மல் மற்றும் தலைப்பாரம் போக்க உதவும் அருமருந்து

சைனஸ், சளி, இருமல், மூக்கடைப்பு, தலைப்பாரம்,தொண்டைவலி எதுவாக இருந்தாலும் விரைவில் குணமாக இந்த திப்பிலி சித்தரத்தைச்  சூரணத்தைப் பயன்படுத்தி பயனடையுங்கள். 

Published On :

சைனஸ், சளி, இருமல், மூக்கடைப்பு, தலைப்பாரம்,தொண்டைவலி எதுவாக இருந்தாலும் விரைவில் குணமாக இந்த திப்பிலி சித்தரத்தைச்  சூரணத்தைப் பயன்படுத்தி பயனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

திப்பிலி      - 100 கிராம்

சித்தரத்தை     -  100 கிராம்

அதிமதுரம்      -  100 கிராம்

பனங்கற்கண்டு  -  100 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம் மற்றும் பனங்கற்கண்டு இவை நான்கையும் எடுத்துக் கொண்டு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். 

திப்பிலி, சித்தரத்தை, பனங்கற்கண்டு மற்றும் அதிமதுரம் நான்கையும் தனித்தனியாக அரைத்து பொடிசெய்து கொள்ளவும். பொடிசெய்த பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் சைனஸ், தும்மல் மற்றும் தலைப்பாரம் சார்ந்த குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படும்பொழுது இந்தச் சூரணத்தை காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடவும். தேவைப்பட்டால் மூன்றுவேளையும் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

Telegram குழுவில் இணைய
https://t.me/kovaibalavegetableclinic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.